வன்கொடுமை வழக்கில் முக்கிய அரசியல்வாதிக்கு ஆயுள் தண்டனை

0
5

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா என்பவருக்கு தனது முன்னாள் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

34 வயதான முன்னாள் இந்திய எம்.பி., மீதான குற்றச்சாட்டுகள் முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான வெளிப்படையான வீடியோக்கள் ஊடாக பரவத் தொடங்கின, இது நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

ரேவண்ணா முன்னாள் இந்தியப் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரன் ஆவார்.

நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை காணொளிகள் அவரது மாநிலத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, ஏப்ரல் 2024 இல் ரேவண்ணா தனது ராஜதந்திர கடவுசீட்டை பயன்படுத்தி இந்தியாவை விட்டு வெளியேறினார்.

அப்போது, ரேவண்ணா அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி அந்த வீடியோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று கூறினார்.

எனினும் ஜெர்மனியில் இருந்து வீடு திரும்பிய ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்னும் இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கையும் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here