கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை, பொல்கஹவெல, மாத்தளை மற்றும் நாவலப்பிட்டியவிலிருந்து இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.