வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு, வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போது, இந்த தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தகவலை வழங்கியுள்ளார்.
நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
இதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சீதையம்மன் ஆலய அபிவிருத்திக்குத் தேவையான காணியைப் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து அதிகமான பக்தர்களை சீதையம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தை, விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.