வவுனியாவில் சுகாதார சீர்கேடான முறையில் பெருந்தொகையான மாட்டறைச்சி கைப்பற்றல்!

0
11

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 558 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி திங்கட்கிழமை (04) மாநகரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த தனியார் பேருந்தில் சுகாதார சீர்கேடான முறையில் பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்படவிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் பிரதிமுதல்வர் மற்றும் சபை உறுப்பினர் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் இறைச்சியினை பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார் 558 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இறைச்சிகள் சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு மாநகரசபையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை கொண்டுவந்த நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here