சட்டவாக்க நடைமுறை தொடர்பில் பாராளுமன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

0
8

இலங்கை சட்டக் கல்லூரி ‘சட்ட மாணவர்களின் மனித உரிமைகள் இயக்க’ பயிலுனர்களுக்கு பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி நேற்று (04) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பிரதான உரையை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ‘பாராளுமன்றத்தில் சட்டவாக்க செயன்முறை’ எனும் தலைப்பில்  நிகழ்தினார்.

அதனையடுத்து கேள்வி, பதில் அமர்வு இடம்பெற்றதுடன், இதில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, பாராளுமன்ற சபை ஆவண அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் காஞ்சன ஹேரத் மற்றும் பாராளுமன்ற சட்டமூல அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் சாந்த பர்னாந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், இந்தப் பயிலுனர்கள் பாராளுமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here