ஆஸ்திரேலியாவின் ரூ.1140 கோடி திட்டம்: இந்திய தூதராக சாரா டெண்டுல்கர் நியமனம்!

0
3

கிரிக்கெட்டின் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Come and Say G’Day என்ற இந்த பிரசாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பர பிரசாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

உலகளாவிய சுற்றுலா பயணிகள் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் 27 வயது மாடல் சாரா, சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் ஈடுபடப்போகிறார். இதற்காக அவர் உலகம் முழுவதும் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சாரா டெண்டுல்கர், இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here