சீனாவின் கசாக் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரிலுள்ள தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்ததனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இச்சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாகவும் கூறுப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.