கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying Doctors நிறுவனத்துக்கு சொந்தமான வைத்திய விமானமொன்று (Air Ambulance) சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ எனும் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (07) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் விமானி,வைத்தியர்,செவிலியர்கள், தரையில் இருந்த இருவர் என மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருகிறது.