பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அல்லது அவரது அலுவலக பணியாளர் எவரும் காவல்துறை கைதுகள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளில் தேவையற்ற செல்வாக்கை செலுத்தவோ அல்லது தலையிடவோ மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதாள உலகத்தை ஒழிப்பதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் ஒரு விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விடுவிக்கும் முயற்சியில் போலியாக அமைச்சரின் செயலாளரை போல மகரகம காவல்துறைக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஜூலை 8, 2025 அன்று கைது செய்யப்பட்டதாக அமைச்சு வெளிப்படுத்தியது.
மேலும் இது குறித்த சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசேட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.