யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
கொடிகாமம், ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு கார், ஒரு மோட்டார்சைக்கிள், மற்றும் ஒரு முச்சக்கர வண்டி ஆகியவை மோதுண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்