ஜப்பானில் மக்கள் தொகை அண்மைக்காலமாக வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 இலட்சம் பேரை ஜப்பான் இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் தொகை பிரச்சினையை சமாளிக்க செயற்கை நுண்ணறிவுதான் ஒரே வழியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில், பிறப்பு விகிதத்துக்கும் இறப்பு விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகையானது கவலைதரும் சவாலான விடயமாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ செலவினங்கள், சமூக சேவை தொடர்பான அழுத்தங்களால், மக்கள் தொகை குறைவதால், தொழிலாளர் வளம் குறையும், புவியியல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இங்கு பிரச்னைகளை கையாள செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு மக்கள் தொகை வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்களை செயற்கை நுண்ணறிவு தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.