தயாரிப்பாளராக மாற நடிகர் சூரி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் பல்வேறு முன்னணி இயக்குநர்கள் சூரியிடம் கதைகளை கூறி வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர்கள் பலரும் அவருடைய தேதிகளுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி.
இதனிடையே, தயாரிப்பாளராக மாற சூரி திட்டமிட்டு இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் சம்பளத்துக்கு பதில், தயாரிப்பாளராக இணைந்து வியாபாரத்தில் பங்கு என்ற முறையில் பணிபுரிய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுவொரு நல்ல முயற்சி என்று பலரும் கூறுகிறார்கள்.
‘மண்டாடி’ பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூரி.