மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

0
70

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாகவும், உயிரிழந்தவர் நீல நிற டி-சர்ட் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் கண்டி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here