முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்க்குள் நுழைவதற்கு முன் ஊடகங்களிடம் பேசிய வீரவன்ச, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
குறிப்பாக, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கருத்துக்களை மறுத்து, அவர் குறித்து சர்ச்சைக்குரிய கூற்றுகளை வீரவன்ச முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த கர்தினால், அவரது கூற்றுகள் “பொய்யானவை மற்றும் அவதூறானவை” எனக் கூறி, அவற்றை திருத்தி மறுப்பு வெளியிடுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.