மாங்காடு பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

0
36

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here