சீதாவாக்க பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

0
12

கார் விபத்தில் தொடர்புடைய வாகன சாரதி ஒருவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க காவல் நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் சீதாவாக்க பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எதிர்வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் பொலிஸ் காவலில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்வையிட்ட ஹோமாகம நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பாதுக்கையின் மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதியதை அடுத்து, நேற்று மாலை (15) இந்த சம்பவம் இடம்பெற்றுளளது. விபத்தைத் தொடர்ந்து, பாதுக்கை காவல் அதிகாரிகள் காரின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படும் சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர், அதிகாரிகளை அச்சுறுத்தி, துஷ்பிரயோகம் செய்து, காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியைத் தாக்க முயன்றார் என கூறப்படுகின்றது.

சந்தேக நபர் உடல்நிலை சரியில்லை என தெரிவித்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு வைத்தியசாலையில் இருந்தபோது அவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் பாதுக்கை காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் நிலையத்தில் நடந்த கைகலப்பில் காயமடைந்து தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதி, சந்தேக நபரின் நண்பர் என்றும், வாகன விபத்துக்கு முன்னர் இருவரும் ஒன்றாக மது அருந்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here