வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 321 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளைக் கொண்ட கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 307 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்தனர், வடக்கு கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அது தெரிவித்துள்ளது.
அத்துடன் பெரும்பாலானோர் திடீர் வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் அடுத்த சில மணிநேரங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதோடு மக்கள் “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை” எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
மாகாண சபைகள், மலைப்பகுதி நிறைந்த மாவட்டங்களான புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் ஆகியவை கடும் மழை அதிகம் பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளது.