கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளைத் தேடி மொத்தம் 226 பொறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சபையின் ஊடக செய்தித் தொடர்பாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையில் இருந்து வெளியேறியவர்களில் 85 சதவீதம் பேர் மின் பொறியாளர்கள், 8 சதவீதம் பேர் இயந்திர பொறியாளர்கள் மற்றும் 7 சதவீதம் பேர் சிவில் பொறியாளர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக,மின்சார சபையில் தற்போது பொறியாளர்கள் இருந்தபோதிலும் 60 புதிய பொறியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை மீறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.