ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம்

0
14

 

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்​டம்​பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடை​பெறுகிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடி​யாக தகுதி பெறும்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலைத் தொடர்ந்து இந்​தியா நடத்​திய சிந்​தூர் ஆபரேஷன் நடவடிக்​கை​யால் ஆசிய கோப்​பை​யில் பாகிஸ்​தான் பங்​கேற்​பது நிச்​சயமற்​ற​தாக இருந்​தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்​வதற்கு பாகிஸ்​தான் அணிக்கு விசா வழங்க மத்​திய அரசு சம்​மதம் தெரி​வித்​தது.

ஆனால் பாகிஸ்​தான் ஹாக்கி அணி பாது​காப்பு காரணங்​களை கூறி வரமறுத்​தது. இந்​நிலை​யில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்​தான், ஓமன் அணி​களுக்கு பதிலாக வங்​கதேசம், கஜகஸ்​தான் அணி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக போட்டி அமைப்​பாளர்​கள் அறி​வித்​துள்​ளனர். இதன்​படி ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், கஜகஸ்​தான் அணி​களும் ‘பி’ பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான கொரி​யா, மலேசி​யா, சீன தைபே, வங்​கதேச அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. தொடக்க நாளில் நடை​பெறும் முதல் ஆட்​டத்​தில் மலேசியா – வங்​கதேச அணிகள் மோதுகின்​றன. அன்​றைய தினம் நடை​பெறும் கடைசி ஆட்​டத்​தில்​ இந்​தி​யா – சீ​னா அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​துகின்​றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here