தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு இன்றும் (20) மூன்றாவது நாளாக தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் குறிப்பிட்டார்.
இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப் புறக்கணிப்புக்கான காரணம் எனத் தெரிவித்தார்.