கண்டி – மெனிக்கும்புர பொருளாதார மையத்தில் சூழல் மாசடைவு ; பொதுமக்கள் கவலை

0
11

கண்டி, கட்டுகாஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள குப்பைகள் முறையாக அகற்றப்படாமை காரணமாக சுற்றாடல் அசுத்தமடைந்து காணப்படுவதுடன் நுகர்வுப் பொருட்களை கொள்வனவுசெய்யும்போது தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறி, பழவகைகள், உலர் உணவுப் பொருட்கள், மற்றும் கருவாடு போன்ற பல்வேறு பொருட்கள் பாரியனவில் விற்பளைக்கு வருகின்றன.

அனால் அங்கு தினம் சேர்கின்ற திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் கண்டி மாநகர சபையும் முறையான நடவடிக்களை மேற்கொண்டு பழுதடைந்த காய்கறிகள் மற்றும் பழவகைகளை அகற்றாத காரணத்தால் அவை ஆங்காங்னே குவிக்கப்பட்டுள்ளன.

அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதன் காரணமாக வாடிக்கயைானர்கள் அசளகரியங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். எனவே திண்மக் கழிவுகளை முறையாக அகற்ற கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here