ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் நேற்று (22) முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.