ரணிலை பார்க்க சென்ற அரசியல்வாதிகள்;நுழைவுக்கான அனுமதி மறுப்பு

0
3

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியலைத் தொடர்ந்து, நேற்று (22) இரவு பல அரசியல்வாதிகள் மகசின் புதிய விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க மற்றும் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் தமது குழுவுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை,

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த சர்க்கரை அளவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன ஆகியோர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நாட்டின் வரலாற்றில் ஒரு நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது, ​​விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்கு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பான விசாரணையே இடம்பெற்றது.

ஜூன் 24 அன்று, இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத் துறை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

விசாரணை தொடர்பாக விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here