கொட்டகலை Pentecostal Assembly of Srilanka திருச்சபையின் கீழ் இயங்கிக் வரும் lk212 சிறுவர் அபிவிருத்தி அணுசரனையாளர் திட்டத்தின் மூலம் சிறுவர் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வீதி ஊர்வலம் மற்றும் வீதி நாடகம் மிக சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வானது நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கொட்டகலை புகையிரத கடவை வீதி அருகில் ஆரம்பிக்கப்பட்டு கொட்டகலை பிரதேசசபை வரை இடம்பெற்றது.
இந்த ஊர்வலம் உள்ளூர் சிறுவர்களுக்கான பாதிப்பு மற்றும் எதிர்கால அபாயங்களை தடுக்கும் நோக்கிலும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வீதி நாடகமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழு நன்றி தெரிவித்துள்ளது.