காஸாவில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

0
3

தெற்கு காசாவின் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று (25) இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இரண்டு தடவைகள் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதல் தடவை தாக்குதலில் மருத்துவமனை பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மீட்புப் பணிக்காக மருத்துவ உதவியாளர்களும், பத்திரிகையாளர்களும் வந்த நிலையில் இரண்டாவது வான் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது துயரமான விபத்து என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனை மீதான தாக்குலை உறுதிப்படுத்திய இஸ்ரேல், பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. இது தொடர்பில் உள் விசாரணை நடத்தப்படும் என அறிக்கை வெளிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here