கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவுக்கு விளக்கமறியல்!

0
8

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரி நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம்,  சிராவஸ்திபுர,  திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here