பதுளை நடுகார கந்த வனப்பகுதியில் இன்று (26) மதியம் மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் ஐந்து ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியதாகவும் பதுளை வன அதிகாரி ருவான் கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
நடுகார கந்த வனப்பகுதியில் இரண்டாவது நாளாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், பதுளை வன அலுவலகம் மற்றும் பதுளை நகர சபை தீயணைப்பு படையினர் இணைந்து தண்ணீர் பவுசர்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிலவும் வறண்ட வானிலை காரணமாக, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்லது வேடிக்கைக்காக யாராவது வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.