அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை: கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர்!

0
27

செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.

இந்தத் தொடரில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதிபெறுவார். கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார்.

செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்​களுக்கு பிறகு இந்​தியா நடத்த உள்​ளது. கடைசி​யாக 2002-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வின் விஸ்​வ​நாதன் ஆனந்த் வெற்றி பெற்​றிருந்​தார். இந்​தத் தொடரில் வீரர்​கள் நாக் அவுட் முறை​யில் போட்​டி​யிடு​வார்​கள். இதனால் ஒவ்​வொரு சுற்​றி​லும் தோல்​வியடை​யும் வீரர் வெளி​யேற்​றப்​படு​வார்.

ஒவ்​வொரு சுற்​றும் மூன்று நாட்​கள் நீடிக்​கும். முதல் இரண்டு நாட்​களில் இரண்டு கிளாசிக்கல் ஆட்​டங்​கள் நடை​பெறும். இவை டிரா​வில் முடிவடைந்​தால் மூன்​றாவது நாளில் டை-பிரேக்​கர் நடை​பெறும். செஸ் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 206 வீரர்​களில் முதல் 50 இடங்​களில் உள்ள வீரர்​களுக்கு முதல் சுற்​றில் ‘பை’ வழங்​கப்​படும். இதனால் இவர்​கள் நேரடி​யாக 2-வது சுற்​றில் பங்​கேற்​பார்​கள். 51 முதல் 206-வது இடங்​களில் உள்ள வீரர்​கள் முதல் சுற்​றில் விளை​யாடு​வார்​கள்.

உலக சாம்​பியன் டி.கு​கேஷ், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த ஆர்​.பிரக்​ஞானந்​தா, நடப்பு சாம்​பியனும் உலகின் முதல் நிலை வீரரு​மான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன், உலகத் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அர்​ஜுன் எரி​கைசி உள்​ளிட்ட நட்​சத்​திர வீரர்​கள்​ உலகக்​ கோப்​பை தொடரில்​ களமிறங்​க உள்​ளனர்​. இந்​தத்​ தொடரின்​ பரிசுத்​தொகை ரூ.17.53 கோடி​யாகும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here