போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது எப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட போலந்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் வாடிசா கோசினியா விமானிக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து ஓடுபாதையை சேதப்படுத்தியதால், ஓகஸ்ட் 30-31ம் திகதிகளில் நடக்கவிருந்த விமான கண்காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.