செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை (29) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.