நாட்டினைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – யாழ். மாவட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு அமைச்சர் அழைப்பு!

0
16

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கடற்றொழி்ல் அமைச்சர் , யாழ் . மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபன்,  மாவட்டச் செயலகம் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த  அமைச்சர்

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில்,  வாக்களித்த மக்களின்  எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும்,  அதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

மேலும்  டொலரின் பெறுமதி ஸ்திரமற்ற நிலையிலிருந்து தற்போது சீராகவுள்ளது, டொலர் கையிருப்பு படிப்படியாக அதிகரித்து 6.09 பில்லியன் டொலர் உள்ளது.

இவ்வாண்டுஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 இலட்சத்தினை அடைந்துள்ளது, நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கிறது. பாரியளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். அந்தவகையில் மேன்மேலும் கூடுதலான நிதி  யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதன் ஊடாக வீதி அபிவிருத்திக்கு மேலும் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

எனவே நாட்டினை கட்டியெழுப்ப  அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here