மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

0
25

கொட்டகலை பகுதியில் நாளை 31 ஆம் திகதி மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலத்தில் மலையகத்தின் ஹட்டன் பகுதியில் உள்ள சுமார் 10 கோயில்களில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு கொட்டகலை ஈரநில பூங்காவில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது.

பெரிய மண்வெட்டி தோட்டம்,சின்ன மண்வெட்டி தோட்டம்,ரொசிட்டா தோட்டம்,ஸ்டோனிகிளிஃ, ஹரிங்டன்,லொக்கிள்,பளிங்கு மலை தோட்டம்,கல்கந்தை தோட்டம்,கொமர்சல் தர்மபுரம்,மூங்கிள் கொட்டகலை, செல்வகந்தை ,எதன்சைட் ஆகிய தோட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு,கொட்டகலை பிரதேச சபையில் இருந்து கொட்டகலை ஈரநில பூங்கா வரை இந்த ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பிற்பகல் 1 மணி முதல் 4 மணிவரை ஆசியுரையும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here