கண்டி தேசிய வைத்தியசாலையின் நிலம் ஆக்கிரமிப்பு;நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

0
34

வைத்தியசாலைக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்படாத குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலத்தில் கட்டடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக, வைத்தியசாலை அதன் செயல்பாடுகளை மேற்கொள்வதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இலங்கையின் இரண்டாவது பெரிய தேசிய வைத்தியசாலையான கண்டி தேசிய வைத்தியசாலை, ஒரு போதனா வைத்தியசாலையாகவும் செயல்படுகிறது.

இது 80 வார்டுகள், 11 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பல சிகிச்சை பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தினமும் வரும் ஏராளமான நோயாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் வைத்தியசாலையை மேலும் மேம்படுத்த முடியும் என்றாலும், அந்த முன்னேற்றம் தடைபட்டுள்ளது.

வைத்தியசாலையின் நிலத்தை தனிநபர்கள் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஆக்கிரமித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலத்தில் வீடுகள், கடைகள் மற்றும் பிற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், கடைகள், பூக்கடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்லும் பாதையைத் தடுத்து நிறுத்தியுள்ளன.

இதன் விளைவாக, மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியை சரியான நேரத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு வருவது கடினமாகியுள்ளது என்று வைத்தியாயசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டி வைத்தியசாலையின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்யவும் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here