இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்தின்படி மாதந்தோறும் செய்யப்படும் CIPETCO எரிபொருள் சில்லறை விலை திருத்தம் தொடர்பாக, செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் ஓக்டென் 95 பெற்றோல் 341.00. ரூபாவாகவும், ஓக்டென் 92 பெற்றோல் ரூ.6 குறைக்கப்பட்டு .299. ரூபாவாகவும் சிலோன் வெள்ளை டீசல் லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும் பிரீமியம் டீசல் லிட்டருக்கு 12 ரூபாய் குறைக்கப்பட்டு 313 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை சிலோன் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.