ஜிம்பாப்வே உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி!

0
31

ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அதன்படி, இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றியை தனதாக்கியுள்ளது.

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 277 ஓட்டங்கள் எடுத்தது.

துடுப்பாட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரன் 79 ஓட்டங்களும், சிக்கந்தர் ராசா ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணிக்காக துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, இலங்கை அணிக்கு 278 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதில் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 49 ஓவர்கள் மற்றும் 3 பந்துகளில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 278 ஓட்டங்கள் எடுத்தது.

பதும் நிஸ்ஸங்க 136 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும், போட்டியின் நாயகன் விருதை வென்றார்.

இலங்கை அணிக்காக, சரித் அசங்க 71 ரன்கள், சதிர சமரவிக்ரம 31 ரன்கள் மற்றும் ஜனித் லியனகே 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி 07 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலாவது ஒருநாள் போட்டியிலும் வென்ற நிலையில் 2-0 என்ற கணக்கில் இலங்கை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here