இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வருபவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

0
125

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வருபவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலிடமிருந்து பல கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை அடிப்படையாக கொண்டு பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வருபவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here