‘குமார சம்பவம்’ ஒரு போராளி பற்றிய கதை: இயக்குநர் விளக்கம்

0
37

 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘குமார சம்பவம்’. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இதில் பாயல் ராதாகிருஷ்ணா,ஜி.எம்.குமார், குமரவேல், பால சரவணன், வினோத்சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்திஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் கே.ஜி.கணேஷ்தயாரித்துள்ளார். செப்.12-ல் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசும்போது, “இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தைப் பற்றிய கதை அல்ல. இது ஒரு திரைப்பட இயக்குநரின் கதை. ஆனால், அவர் படம் எடுத்த கதை அல்ல. இதில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமல்ல, அனைத்து எழுத்து வடிவங்களையும் நான் மட்டுமே உருவாக்கினேன். இது பேராசைதான். ஆனால் இதன் பின்னணியில் ரசிகர்களுக்குத் தரமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. இந்தப் படத்தின் நாயகன் குமரன் திறமைசாலி. அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here