எல்ல வெல்லவாய வீதியில் விபத்தில் சிக்கிய பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணையத்தால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என போக்குவரத்து பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
‘சுற்றுலாப் பயணங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை’.
வீதியில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு, விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்ய அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளது.
அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்ய போக்குவரத்து மருத்துவ பிரிவும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இன்று (06) எல்ல பகுதிக்கு செல்லும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எல்ல காவல் துறையின் எல்ல-வெல்வாய பிரதான வீதியில் தங்கல்ல பகுதியில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியின் 24வது கிலோமீட்டர் (24 ஆம் கட்டை)இடுகைக்கு அருகில் உள்ள பகுதியில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.