சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் ஜிம்பாப்வே 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் ஜிம்பாப்வே மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரினையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹராரேவில் முன்னதாக ஆரம்பித்த இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே இலங்கையை துடுப்பாடப் பணித்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறியதோடு 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மட்டும் எடுத்து சுருண்டனர்.
மேலும் இது இலங்கை வீரர்கள் T20I போட்டிகள் வரலாற்றில் பெற்ற இரண்டாவது அதிகுறைந்த ஓட்டங்களாகவும், ஜிம்பாப்வேயுடனான அதிகுறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.
இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் கமில் மிஷார 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள ஜிம்பாப்வே பந்துவீச்சில் ப்ரட் எவான்ஸ் மற்றும் சிக்கந்தர் ரஷா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, ப்ளெஸ்ஸிங் முசாரபனி 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 81 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே வீரர்கள், 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை எடுத்து போட்டியின் வெற்றி இலக்கை எட்டினர்.
ஜிம்பாப்வேயின் வெற்றியினை உறுதி செய்த தஷிங்க முசேகிவா 21 ஓட்டங்கள் வெற்றி பெற்றதோடு, துஷ்மன்த சமீர 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.