நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.
காலநிலை பொருத்தமானதாக இருப்பதாலும் வெள்ளிக்கிழமை விடுமுறை உட்பட வார இறுதி விடுமுறை என்பதாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியா சுற்றுலா பகுதிக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகர் ஹக்கல பூங்கா , விக்டோரியா பூங்கா, கிரகறி பூங்கா, கிறகறி வாவி கரையிலும்,வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர்.
அத்தோடு நுவரெலியா கிறகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும், மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.
இதன்காரணமாக வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை , நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் வாகனங்கள் அணிவகுந்து ஊர்ந்து செல்கின்றன.
இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி, நகர்ப்பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து பொலிஸாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை துரிதமாக சீர் செய்து வருகின்றனர்.
அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
(ரோஷன்)