மட்டக்களப்பு பாடகருக்கு இசையமைப்பாளர் தேவா தந்த வாய்ப்பு!

0
39

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாக் கொண்டு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் முன்னாள் மாணவர் சபேஷன் தென்னிந்திய தொலைக்காட்சியான Zee Tamil சரி கம ப நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றி வாராந்தம் நல்ல பெறுபேறுகளை நடுவர்களிடமிருந்து பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சரி கம ப போட்டியில் தேனிசைத் தென்றல் தேவா சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார்.

இதன்போது 2015 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் தேவா திருகோணமலைக்கு வந்திருந்த போது அங்கு தனக்கு பின்னணியில் பாடுவதற்கான வாய்ப்பு கூட கிடைத்திருக்கவில்லை என்பதை இசையமைப்பாளர் தேவாவிடம் ஈழத்து பாடகர் சபேஷன் கவலையுடன் கூறினார்.

அதனையடுத்து சபேஷன் நிகழ்ச்சியில் பாடி தனது திறமையை வௌிக்காட்டிய பின்பு இசையமைப்பாளர் தேவா “பின்னணியில் கூட பாட முடியாமல் போனதையிட்டு அந்த குழந்தை எவ்வளவு வருந்தியிருக்கும் அவருக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி கொழும்பிலும், டிசம்பர் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் நடைபெறவிருக்கின்ற எனது நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு தருவேன்” என்று கூறினார்.

வழமைபோல இசையமைப்பாளர் தேவாவின் கனிவான பண்பையும் சபேஷனின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தையும் கண்டு அரங்கமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்ததது. ஈழத்து பாடகர் சபேஷனின் எதிர்கால பயனத்துக்கு behindmenews.com செய்திச் சேவையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here