போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்ய திட்டமிருந்த நபர் கைது

0
21

ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் பினர போயா தினமான இன்று (07) சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை குறித்த தோட்டத்திலுள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

பினர போயா தினத்தன்று உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து தனது தோட்டத்தில் மறைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(எஸ். ரோஷன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here