ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டவாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் செயலாற்றும்போது குழு அல்லது அதற்கு நிகரான பொறிமுறையொன்றின் கீழ் செயலாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
மற்றைய கட்சிகளுடன் பொது விடயங்களில் செயலாற்றுவது குறித்து கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி பேச்சுக்களை நடத்தியிருந்தது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து வௌிப்படைத்தன்மையுடன் செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.