பொடி மெனிக்கே ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 08:50 மணிக்கு, பதுளையிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயில் (இலக்கம் 1006) தடம் புரண்டுள்ளது.
அதற்கமைய, காலை 09:10 மணியளவில் பதுளை மற்றும் ஹாலி எல ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தைக் கடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ள ரயில்களும் தாமதமாக இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.