நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

0
5

நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.

நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர்.

இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. இதனால் நேபாளம் முழு​வதும் போராட்​டம் தீவிரமடைந்​தது. அந்த நாட்டு நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம், அரசு அலு​வல​கங்​கள், பிரதமர், அதிபர், மூத்த அமைச்​சர்​களின் வீடு​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. இது​வரை 34 பேர் உயி​ரிழந்தனர்.

போ​ராட்​டம் வலு​வடைந்​த​தால் அதிபர் ராம் சந்​திர பவு​டால், பிரதமர் சர்மா ஒலி அடுத்​தடுத்து பதவி வில​கினர். நாட்​டின் பாது​காப்பை ராணுவம் ஏற்​று, நேபாளம் முழு​வதும் ஊரடங்கை அமல்​படுத்​தி​யது. இதன்​ காரண​மாக நேபாளத்​தில் அமைதி திரும்பி வரு​கிறது. புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக 12-க்​கும் மேற்​பட்ட போராட்ட குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இந்த பேச்​சு​வார்த்தை நேற்​றும் நீடித்​தது.

நேபாள உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, நேபாள மின்​சார ஆணை​யத்​தின் முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங், காத்​மாண்டு மேயர் பலேந்​திர ஷா, தரன் நகர மேயர் ஹர்கா சம்​பாங் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் முன்​மொழியப்​பட்டு உள்​ளன. இதில் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்​கி, மின்​சார ஆணைய முன்​னாள் தலை​வர் குல் மேன் கிசிங் ஆகியோர் முன்​வரிசை​யில் உள்​ளனர்.

நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வுக்கு அருகே சுசிவபுரியில் உள்ள ராணுவ தளத்​தில் பதவி வில​கிய பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் பாது​காப்​பாக தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

1,000 இந்​தி​யர்​கள் தவிப்பு: நேபாளத்​தில் சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் சிக்கி உள்​ளனர். அவர்​களை மீட்க மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின்​படி ஏர் இந்​தியா நிறு​வனம் கடந்த சில நாட்​களாக சிறப்பு விமானங்​களை இயக்கி வரு​கிறது.

போராட்​டங்​களின்​போது தலைநகர் காத்​மாண்டு உட்பட பல்​வேறு நகரங்​களில் உள்ள சிறை​களில் இருந்து 13,000 கைதி​கள் தப்​பியோடி விட்​டனர். இதில் சுமார் 1,400 பேர் மட்​டும் பிடிபட்டு உள்​ளனர். இந்த சூழலில் நேபாளத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்ற 60 கைதி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here