மத்திய வங்கியின் மற்றுமொரு ஆய்வறிக்கை வெளியீடு!

0
6

இலங்கை மத்திய வங்கி (CBSL), 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டில் நடத்தப்பட்ட ஸிஸ்டெமிக் ரிஸ்க் ஆய்வின் (SRS) முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள்,நிதிச் சந்தை பங்கேற்பாளர்களின் நிதி அமைப்பில் ஒட்டுமொத்த நம்பிக்கை, உணரப்படும் அபாயங்களின் ஆதாரங்கள் மற்றும் அத்தகைய அபாயங்களின் சாத்தியக்கூறுகளை சுருக்கமாகக் கூறுகிறது.

வெளியீட்டின் முடிவுகள் பதிலளித்தவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை எனவும் வங்கியின் அபிப்பிராயம் அல்லவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை பங்கேற்பாளர்களின் ஆபத்துகள் மற்றும் இலங்கை நிதி அமைப்பில் அவர்களின் நம்பிக்கை குறித்த கருத்துக்களை அளவிடுவதுடன் அது குறித்து கண்காணிபது இந்த ஆய்வின் அடிப்படை ஆகும்.

கணக்கெடுப்பின் மாதிரி கட்டமைப்பில் உரிமம் பெற்ற வங்கிகளின் ஆபத்து அதிகாரிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள், ஒரு விசேட குத்தகை நிறுவனம், காப்பீட்டு நிறுவனங்கள், யூனிட்-டிரஸ்ட் மேலாண்மை நிறுவனங்கள், மார்ஜின் வழங்குநர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு தரகு நிறுவனங்கள், உரிமம் பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

ஆய்வில் கண்டறித்த விடயங்கள், குறிப்பாக நிதித்துறை இடர் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின் தரவுகள் மத்திய வங்கியின் இணையதளத்தில் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here