கொலம்பியாவின் கொக்கோவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை முதல் இந்தக் குழு சுரங்கத்தில் சிக்கியுள்ளது.
அவர்கள் தரை மட்டத்திலிருந்து 28 மீற்றர் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மீட்பு முயற்சிகளுக்கு அதிகாரிகள் போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும், இதன் விளைவாக, உள்ளூர்வாசிகள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்கோ பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இது அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத தங்கச் சுரங்கங்களைக் கொண்ட ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.