இரயில் வரும் வரையில் ஆடல் பாடலில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகள்; நானுஓயாவில் சம்பவம்

0
6

சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று நேற்று (13) நானுஓயா ரயில் நிலையத்தில் பாடி நடனமாடிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் விசேட ரயிலுக்காக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தபோது இடம்பெற்ற இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த ரயில், நிலையத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் இசை மற்றும் நடனத்தை ஆரம்பித்துள்ளனர்.

‘ரயில் வரும் வரை இசை மற்றும் நடனத்துடன் குழு தங்களை மகிழ்வித்தது, இந்த விடயம் சக பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here