தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சிறப்பு வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. இவரது நடிப்பில் கடைசியாக மாமன் படம் வெளியானது.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திடீர் முடிவாக சமூக வலைதளத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது. எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன்.
என்னால் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.