துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை சரியான திசைக்கு கொண்டு வந்துள்ளோம் – பிரதமர்

0
8

கடந்த ஆட்சியின் போது, அதிகாரத்திலிருந்த குழுக்களால் ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நிலையில்
இந்த அரசாங்கத்தினால் சரியான திசைக்கு கொண்டு வர முடிந்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டதற்கான உண்மையான நோக்கம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசதிகளை வழங்க ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது, மாணவர்களின் கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், அறிவு நிறைந்த சிறந்த எதிர்கால மனித வளத்தை உருவாக்க பங்களிக்கும்.

ஒரே கட்டமைப்பின் கீழ் இருக்கும் கல்வி முறைக்குப் பதிலாக, பல்வேறு துறைகளைப் பார்க்கும் மற்றும் திறந்த மனதைக் கொண்ட மனித வளத்தை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்
இது மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க உதவும்” என்றார்.

இந்த நிகழ்வில், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 06 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here